தமிழக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு விழுந்த வாக்குகளால் அதிர்ச்சி

கோவை (12 அக் 2021): தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற ஒரு வார்டின் இடை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 1 வாக்குகள் மட்டுமே கிடைத்து படு தோல்வி அடைந்துள்ளார். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 20 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றுள்ளன. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன

மேலும்...

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக?

சென்னை இ(26 ஜூன் 2021): உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து பாஜக தலைமை முடிவெடுக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,…

மேலும்...

31 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கும் பாஜக!

பருச் (12 பிப் 2021): குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை வழங்கியுள்ளது. பருச் மாவட்டத்தில், பாஜக 31 வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இவர்களில் 17 பெண்கள் அடங்குவர். இந்த மாவட்டத்தில் முதல் தடவையாக பாஜக பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை பருச் மாவட்ட பாஜக தலைவர் மாருதி சிங் அடோதரியா தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தற்போது காங்கிரஸ் கையில் உள்ளது இது இப்படியிருக்க ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM…

மேலும்...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு…

மேலும்...

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் எஸ்டிபிஐ 200 க்கும் அதிகமான இடங்களை வென்று சாதனை!

பெங்களூரு (31 டிச 2020): கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 200 க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எஸ்.டி.பி.ஐ இதுவரை 223 இடங்களை வென்றுள்ளது. மங்களூர் மாவட்டத்தில் எஸ்டிபிஐ அதிக இடங்களை கைபற்றியுள்ளது. மடிகேரி (குடக்) – 10, உத்தரா கன்னடம் – 5, குல்பர்கா – 5, உடுப்பி – 14, பல்லாரி – 2, ஹாசன் – 4 மாவட்டங்கள். சாமராஜநகர், யாத்கீர், ரைச்சூர்…

மேலும்...

நாங்க மூன்றாவது இடம் தெரியுமா? – சங்கு பங்கு என அலட்டிய ராஜேந்தர்!

சென்னை (05 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்காமலேயே ஒரு இடத்தில் மூன்றாவது இடம் பிடித்தோம் என்று என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார். டி.ராஜேந்தர் இன்று சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் வென்று தலைவராகியுள்ள நிலையில் அவர் சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் சிந்தித்து…

மேலும்...

ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறிய வெற்றி – ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை (03 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறி வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும். எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை…

மேலும்...