விவசாயியை தரக்குறைவாக பேசிய போலீஸ் – அவமானத்தால் விஷம் குடித்த விவசாயி!

நாகை (05 ஜூலை 2020): பலர் முன்னிலையில் போலீஸ் தரக்குறைவாக பேசியதால் அவமானத்தில் விவசாயில் தற்கொலை முயரற்சியில் ஈடுபட்டுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஏனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (48). விவசாயி. பாண்டியன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் சீர்காழி காவல்நிலைய எஸ்எஸ்ஐ கலியமூர்த்தி, இருதரப்பையும் நேற்றுமுன்தினம் காவல் நிலையம் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது பாண்டியனை எல்லோர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த பாண்டியன்…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்!

நாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 27,674 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 933 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது….

மேலும்...