பாஜக காரர்களுக்கு பாதுகாப்பு – விஜய் ரசிகர்களுக்கு தடியடி!

நெய்வேலி (07 பிப் 2020): நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜய்-யைக் காண வந்த ரசிகர்கள் மீது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதி ரணகளமானது. “மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி, “மாஸ்டர்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக நடிகர் விஜய்-யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர், வருமான வரித்துறையினர். பல மணி நேர விசாரணைக்கு பின்னர்…

மேலும்...

நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் திடீர் போராட்டம்!

நெய்வேலி (07 பிப் 2020): விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடத்தக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் . இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிவசேனா ஆதரவு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து சிவசேனா கருத்து வெளியிட்டுள்ளது. டெல்லியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ஆதரித்து சிவசேனா கருத்து கூறி உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், டில்லி வளர்ச்சிக்காக பணியாற்றிவர் கெஜ்ரிவால். டில்லியை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் கெஜ்ரிவால் என கெஜ்ரிவாலை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது. பாஜக…

மேலும்...

போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார்,…

மேலும்...

ராமர் கோவில் அறக்கட்டளையில் தலித்துகளும் சேர்ப்பு – அமித் ஷா தகவல்!

புதுடெல்லி (05 பிப் 2020): அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கத்தால் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று அதன் அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிவித்த ஒரு மணி நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அறங்காவலர்கள் தொடர்பான அறிவிப்பை  அமித்…

மேலும்...

மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்பிக்கு நோட்டீஸ்!

புதுடெல்லி (04 பிப் 2020): மஹாத்மா காந்தி பற்றி அவதுாறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய, பா.ஜ., – எம்.பி., அனந்த குமார் ஹெக்டேவுக்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியன நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது…

மேலும்...

தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா கொடுத்துப்பாருங்கள் – பாஜகவை மிரட்டும் சிவசேனா!

புதுடெல்லி (04 பிப் 2020): மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்பி விநாயக் ரௌத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய சிவசேனை எம்பி விநாயக் ரௌத் , “உங்களுக்கு தைரியம் இருந்தால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குங்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) சிவசேனை எதிர்க்கும். நீங்கள் எங்களுக்கு ஹிந்துத்வாவை கற்றுத் தர வேண்டாம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு…

மேலும்...

காந்தியா? கோட்சேவா? – மோடிக்கு காங்கிரஸ் கிடுக்கிப்பிடி!

பிரதமர் மோடியின் ஆதரவு மகாத்மா காந்திக்கா?, நாதுராம் கோட்சேவுக்கா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறியதாவது: மகாத்மா காந்தி தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசி உள்ளார் இதற்கு பிரதமர் மோடியின் பதில் என்ன? மேலும் மகாத்மா காநதியை தொடர்ந்து அவமதித்து வரும் பிரக்யா தாக்கூர் மீது மோடி எந்த நடவடிக்கையும் இது வரை…

மேலும்...

பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது வெறுப்பு இல்லை காதல் – பிரபல நடிகை விளாசல்!

இந்தூர் (03 பிப் 2020) பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது ஏதிர்ப்பு இல்லை காதல் என்று இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஸ்வாரா, செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய குடியுரிமை சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கும், ஊடுருவியவர்களை கைது செய்து வெளியேற்றுவதற்கும் ஏற்கனவே சட்ட நடைமுறைகள் உள்ளது. இப்போது புது குழப்பம் ஏன்? பாகிஸ்தான் பாடகர் அத்னான் சாமிக்கு குடியுரிமை வழங்கியதுடன், அதன்…

மேலும்...

மகாத்மா காந்தியை மீண்டும் கொச்சைப் படுத்திய பாஜக எம்பி!

பெங்களூரு (03 பிப் 2020): மகாத்மா காந்தியின் போராட்டம் ஒரு நாடகம் என்று பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியன நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. சத்யாகிரகத்தால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லவில்லை. விரக்தியாலேயே ஆங்கிலேயர்கள் சுதந்திரம்…

மேலும்...