விவசாயிகளின் அடுத்தக்கட்ட போராட்டம் – ரிலையன்ஸை டார்கெட் செய்யும் விவசாயிகள்!

புதுடெல்லி (10 டிச 2020): ஏற்கனவே மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் விவசாயிகள் தற்போது மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி தங்கள் பார்வையை செலுத்தி உள்ளனர் மத்திய அரசின் வேளாண்மை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வரும் நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை துவக்கியுள்ளனர் அதன்படி…

மேலும்...

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அடைப்புக்கு அதிக அளவில் ஆதரவு!

புதுடெல்லி (08 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இன்று பாரத் பந்த்தும் நடந்து வருகிறது. இருபத்தைந்து அரசியல் கட்சிகள், பத்து தொழிற்சங்கங்கள் மற்றும் 51 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பந்த்க்கு ஆதரவை தெரிவித்துள்ளன. இதற்கிடையே பிரச்னையை தீர்க்க மத்திய அரசு புதன்கிழமை அழைத்த அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விவசாயிகள் அமைப்புகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும்…

மேலும்...

பாரத் பந்த்தின்போது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸ் முடிவு!

புதுடெல்லி (07 டிச 2020): விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது கடைகளை வலுக்கட்டாயமாக மூட அனுமதிக்கப்படாது. சாதாரண வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள். என டெல்லி காவல்துறை கூற்றுப்படி, எச்சரிித்துள்ளது. மத்திய அரசின் விவசாயிகளின் சட்டங்களை வாபஸ் பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாரத பந்த் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பந்த்திற்கு காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆதரவை அறிவித்துள்ளன….

மேலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல்!

சென்னை (06 டிச 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டர் பதிவில், “நீர் பற்றாக்குறை மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக விவசாயிகள் பாதிப்படைவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற சட்டங்களாலும் விவசாயிகள் பாதிக்கபப்டுகின்றனர். என்று கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் “விவசாய மசோதாவை எதிர்த்து விவசாயிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றை அடையாளமாக அவர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக அணிவகுத்துள்ளனர்.” என்று கார்த்தி கூறியுள்ளார்…..

மேலும்...

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையின்போது அசத்திய விவசாயிகள்!

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகள் அரசுடன் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சொந்த உணவை கொண்டு வந்ததோடு அரசு ஏற்பாடு செய்த உணவையும் நிராகரித்தனர். மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சனிக்கிழமையன்று ஐந்தாவது முறையாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது சொந்த தேநீர் மற்றும் உணவைக் கொண்டு வந்தனர். ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை பிற்பகல் 2.30 மணிக்கு…

மேலும்...

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் கிடுக்கிப்பிடி – தோல்வியில் முடிந்த ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை!

புதுடெல்லி (05 டிச 2020): விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்தது.. விதிகளை ரத்து செய்யாமல் எந்த விவாதமும் இருக்காது என்று விவசாயிகள் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். விதிகளை வாபஸ் பெறுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக விவசாயிகள் தெளிவுபடுத்தியிருந்தனர். அதே நேரத்தில், சட்டங்களை ரத்து செய்வது…

மேலும்...

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரிட்டிஷ் எம்பிக்கள் ஆதரவு!

லண்டன் (05 டிச 2020): கனடா பிரதமரை தொடர்ந்து 36 பிரிட்டிஷ் எம்பிக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து எம்.பி.க்கள் பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராபின்ஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் முன்னாள் தொழிலாளர் தலைவர் ஜெர்மி கோர்பினும் கையெழுத்திட்டுள்ளார். . 36 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் மூதாதையர்கள் பஞ்சாபை சார்ந்தவர்கள். தொழிலாளர் எம்.பி. தன்மாஜீத் சிங் தேசி தலைமையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில், டொமினிக் ரப்…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் ஆதரவு!

புதுடெல்லி (05 டிச 2020): டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதாக உச்ச நீதிமன்ற பார் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் டேவ் அறிவித்துள்ளார். முன்னதாக, டெல்லி பார் கவுன்சிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக முன்வந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள , துஷ்யந்த் டேவ், விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் ஆகும் என்றார். இதற்கிடையே விவசாயிகள்…

மேலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்!

புதுடெல்லி (03 நவ 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாடல் பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன….

மேலும்...

விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்திய ஜி.கே.வாசன்!

சென்னை (02 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் எதிர் கட்சிகளிடையே இப்போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. இது இப்படியிருக்க க த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இப்போராட்டம் குறித்து கூறுகையில் “எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுகிறது. குறுகியகால நன்மையை கூறி விவசாயிகளின் வருங்கால தொடர் வளர்ச்சி, வருமானத்தை…

மேலும்...