பிப்ரவரி 19 ல் சட்டமன்ற முற்றுகை – ஜவாஹிருல்லா அறிவிப்பு!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று…

மேலும்...

ரஜினிக்கு பாஜக இன்னும் ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை – ஜவாஹிருல்லா விளாசல்!

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க ரஜினிக்கு இன்னும் பாஜக ஸ்க்ரிப்ட் ரெடி செய்யவில்லை என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடர்…

மேலும்...

சென்னை வண்ணாரபேட்டையில் நடந்தது என்ன? – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப் பேட்டையில் போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதற்கு ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று வடசென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக அமைதியான முறையில் போராடியவர்கள்மீது காவல்துறை கொடூரமான கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் சாஹின் பாக் பாணியில் 167 இடங்களில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு…

மேலும்...

ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (11 பிப் 2020): ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்சிஆர், சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூர தாக்குதல் நடைபெற்று உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் . இந்த…

மேலும்...

ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து வெளியிட தயாரா? – ஜவாஹிருல்லா சவால்!

சென்னை (06 பிப் 2020): நடிகர் ரஜினியின் பெற்றோர் அவரது பிறப்பிடம் குறித்து சான்றிதழ் தர தயாரா? என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது முக்கியமான…

மேலும்...

அராஜக செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (25 ஜன 2020): தந்தை பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின்…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கிறது – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (20 ஜன 2020): ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிற விதியை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது…

மேலும்...

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவை புறக்கணிப்போம் – ஜவாஹிருல்லா அறிக்கை!

சென்னை (15 ஜன 2019): அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த…

மேலும்...