நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒட்டகப்பால் – அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்!

ரியாத் (20 டிச 2021): ஒட்டக இறைச்சியும், ஒட்டகப் பாலும் மருத்துவ குணம் நிறைந்தது என்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு ஒட்டகப் பால் கொடுக்கப் பட்டதாகவும், அதன் பலனை நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்த கிறிஸ்டினா இதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆட்டிசம் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ள கிறிஸ்டினா, ஒட்டகம் மற்றும் இறைச்சியின் நன்மைகள் கற்பனை செய்ய முடியாதவை என்று கண்டறிந்துள்ளார்….

மேலும்...

மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால்…

மேலும்...

சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ காப்பி சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!

சென்னை (18 ஜன 2020): சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தில் டீ தயாரிப்பவர் பால் காய்ச்ச கழிவரைக்கு உபயோகிக்கும் நீரை பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஊழியர் ரெயில் கழிவரைக்கு பயன்படுத்த செல்லும் நீரை பிடித்து அதில் பால் காய்ச்சுவது போன்று உள்ளது. இதற்கிடையே அந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடையை மூடி ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும்...