பிஜேபியின் பொதுச் செயலாளர் அமெரிக்காவுக்கு மிரட்டல்!

புதுடெல்லி (28 பிப் 2020): பிஜேபியின் பொதுச் செயலாளர் சந்தோஷ், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி ஸான்டர்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “உங்களது தேர்தலில் புகுந்து தில்லுமுல்லு செய்வோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புது டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரத்திற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்திருந்தார். அதைக் கண்டித்து பெர்னி ஸான்டர்ஸ் கடுமையான முறையில் டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்திருந்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியாகியிருந்த பத்திரிகைச் செய்தியைச்…

மேலும்...

தமிழகத்தில் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் பயணம் – மோடிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (26 பிப் 2020): தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில், ஹஜ் புனித பயணம் செல்வதற்கு, மாநில ஹஜ் கமிட்டி வாயிலாக, 6,028 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஏழு குழந்தைகளும் அடக்கம். இவர்களில், 3,736 பேருக்கு மட்டுமே, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு காரணங்களால், பல…

மேலும்...

ட்ரம்ப், மோடி பேசிக்கொண்டிருந்தபோது ஸ்டேடியத்திலிருந்து கலைந்து சென்ற மக்கள் – வீடியோ!

அஹமதாபாத் (24 பிப் 2020): குஜராத்தில் அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி பேசிக்கொண்டு இருந்தபோது பொதுமக்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர். ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். அப்போது, “எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த…

மேலும்...

இந்தியா வந்தார் ட்ரம்ப் – பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு!

அஹமதாபாத் (24 பிப் 2020): இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். ஆமதாபாத் விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11.40க்கு வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரை பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். இசைக் கருவிகள் முழங்க, பல்வேறு கலாசார நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அமெரிக்க…

மேலும்...

இது தேவையா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விளாசும் முன்னாள் நீதிபதிகள்!

புதுடெல்லி (23 பிப் 2020): பிரதமர் மோடியை பாராட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சர்வதேச அளவில் தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பொறுப்புணர்வு மற்றும் நட்புமிக்க நாடாகவும் விளங்குகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்து பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது இந்த பேச்சுக்கு ஓய்வு…

மேலும்...

அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை (23 பிப் 2020): இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ட்ரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு…

மேலும்...

அஜ்மீர் தர்காவிற்கு போர்வை வழங்கினார் பிரதமர் மோடி!

புதுடெல்லி (22 பிப் 2020): அஜ்மீர் தர்காவிற்கு பிரதமர் மோடி போர்வை காணிக்கையாக வழங்கினார். ராஜஸ்தானில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவிற்கு, தர்கா நிர்வாக குழுவினரிடம், பிரதமர் போர்வை வழங்கினார். அப்போது மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் உடனிருந்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும்...

குடியுரிமை சட்ட விவகாரம் – உத்தவ் தாக்கரே- மோடி, சோனியா காந்தி திடீர் சந்திப்பு!

புதுடெல்லி (21 பிப் 2020): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கவுள்ளார். குடியுரிமை சட்டம் காரணமாக நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையிலும், பல்வேறு மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கடசிகள் மகாராஷ்டிராவிலும் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே சிஏஏ குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என உத்தவ் தாக்கரே சமீபத்தில்…

மேலும்...

டொனால்ட் ட்ரம்பின் குஜராத் நிகழ்ச்சிகள் ரத்து!

புதுடெல்லி (20 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் நிலையில் தாஜ்மகாலை பார்க்க விரும்புவதால் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற திங்கட்கிழமை (24-ந்தேதி) இந்தியா வருகிறார். “ஏர்வோர்ஸ்” சிறப்பு விமானம் திங்கட்கிழமை மதியம் 11.55 மணிக்கு ஆமதாபாத் வந்து சேரும். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு செல்கிறார். குஜராத் பயணத்தின் போது மோதிரா கிரிக்கெட்…

மேலும்...

டெல்லியில் தோல்வி அடைந்தும் திருந்தவில்லையா? – மோடிக்கு உத்தவ் தாக்கரே அட்வைஸ்!

மும்பை (18 பிப் 2020): “குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறப் போவதில்லை என்று திரும்ப திரும்பகூறுவதால் கைதட்டல் கிடைக்கலாம் ஆனால் ஓட்டு கிடைக்காது” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய பிரதமர் மோடி, “எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், சிஏஏ, காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது குறித்து திரும்ப திரும்பபெறப்போவதில்லை” என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ” நாட்டில் பல விவகாரங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துங்கள்….

மேலும்...