நிவர் புயலும் தமிழகமும் – முதல்வர் பெருமிதம்!

சென்னை (28 நவ 2020): அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு அவர் தெரிவித்ததாவது : அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும்…

மேலும்...

நிவர் புயலால் 10 லட்சம் பேர் பாதிப்பு!

சென்னை (27 நவ 2020): நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை பகுதிகளில் வீடுகளில் புகுந்த வெள்ளம், மின்சார துண்டிப்பால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்ககடலில் கடந்த 16ம் தேதி உருவான காற்றழுத்தம் தீவிரமடைந்து நிவர் புயலாகவும் அதி தீவிர புயலாகவும் மாறியது. இது நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது. இந்தப் புயல்…

மேலும்...

மெதுவாக நகரும் நிவர் புயல் – கரையை கடப்பதில் தாமதம்!

சென்னை (25 நவ 2020): தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக…

மேலும்...