தெலுங்கானா காங்கிரஸில் 13 மூத்த தலைவர்கள் ராஜினாமா!

ஐதராபாத் (19 டிச 2022): தெலுங்கானா மாநில காங்கிரசில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் 13 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ தனாசாரி அனுசுயா, முன்னாள் எம்எல்ஏ வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்தவர்களில் அடங்குவர். ராஜினாமா கடிதத்தில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...

தொலைபேசி ஒட்டுக்கேட்பு – தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு!

ஐதராபாத் (10 நவ 2022): தெலங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் கட்சிக்கும் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் டி.ஆர்.எஸ் கட்சி தன்னை எதர்க்கெடுத்தாலும் குற்றம்சாட்டுகின்றனர் என தெலங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்தார். போச்கேட் விவகாரம் தொடர்பாக டி.ஆர்.எஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கவர்னர் தமிழிசையின் ஏடிசி துஷார் என்பவருக்கு தொடர்பு இருக்கிறது எனவும் அதில் ராஜ்பவனும் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது. துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல…

மேலும்...

பாஜகவின் ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

புதுடெல்லி (29 அக் 2022): தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முக்கியமான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் நேற்று கைது செய்யப்பட்ட பாஜகவின் புரோக்கர்களில் ஒருவர் எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் சேருமாறு கேட்பது உள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி டெல்லியிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆடியோ பதிவில் தெளிவாக…

மேலும்...

தெலுங்கானா முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!

ஐதராபாத் (11 மார்ச் 2022): தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சோமாஜிகுடாவில் உள்ள யசோதா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடது கை வலி காரணமாக அவர் அவதிபட்டதாக தெரிகிறது. முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்களால் ஆஞ்சியோகிராம் மற்றும் சி.டி ஆகியவற்றிற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சோதனை முடிவில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த இறுதி அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்படும். அவருடன் அவரது மனைவி ஷோபா,…

மேலும்...

அஸாதுத்தீன் உவைசிக்கு முஸ்லீம் லீக் ஆதரவு!

ஐதராபாத் (29 நவ 2020): தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகராட்சி தேர்தலில் ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM ஐ ஆதரிப்பதாக முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தல் டிசம்பர் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் AIMIM வேட்பாளர்களை ஆதரிப்பதாக தெலுங்கானா முஸ்லீம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜக இங்கு கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்….

மேலும்...

பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்!

ஐதராபாத் (27 அக் 2020): தெலுங்கானா மாநிலம் துபாக் இடைத்தேர்தளுக்கான வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ .18.67 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். .பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் உறவினர் சுராபி அஞ்சன் ராவின் வீட்டில் இருந்து சித்திப்பேட்டை போலீசார் இந்த பணத்தை பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றபோது போலீசாரை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த பணத்தில் ரூ .12 லட்சத்தையும் பாஜகவினர் எடுத்துச் சென்றதாகவும், மீதமுள்ள ரூ .5,87,000 லட்சபோலீசாரால்…

மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு!

ஐதராபாத் (08 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், தற்போது தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடத்தாமல் ஏற்கனவே நத்தப்பட்ட உள் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வில் தேர்ச்சி…

மேலும்...

பாஜக தலைவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு!

ஐதராபாத் (01 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் மூத்த பாரதிய ஜனதா தலைவர் (பிஜேபி) தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி சில அறிகுறிகளுடன் கோவிட் -19 பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைராதாபாத் முன்னாள் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு…

மேலும்...

13 வயது மகளை வன்புணர்ந்த கொடூர தந்தை கைது!

ஐதராபாத் (30 மே 2020): பெற்ற 13 வயது மகளையே வன்புணர்ந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அதிலும் தந்தையே மகளை வன்புணரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் விகராபாத் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 46 வயதான ஒருவர் வீட்டில் தனியாக இருந்த தனது 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெட்கக்கேடான சம்பவத்தை செய்த தந்தை,…

மேலும்...

புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...