ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு துபாயில் கைதிகள் விடுதலை!

துபாய் (27 நவ 2020): ஐக்கிய அரபு எமிரேட் டிசம்பர் 2 தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 472 கைதிகளை விடுவிப்பதாக துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் இருப்பார்கள். ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளரான ஷேக் சவுத் பின் சயீத் அல் காசிமி, சிறைகளில் இருந்து 219 கைதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கு முழு ஆதரவையும் தருவதாக…

மேலும்...

தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் துபாய்!

துபாய் (01 நவ 2020): இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்திற்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை துபாய் நகரெங்கும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி துபாயில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள், நகரின் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

மேலும்...

கின்னஸ் சாதனை படைத்த துபாய் மரக்கப்பல்!

துபாய் (30 அக் 2020):துபாயில் உள்ள ஒரு மரக் கப்பல் உலகின் மிக நீளமான மர கப்பலுக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பாரம்பரிய கப்பல் கட்டட தயாரிப்பு நிறுவனமான ஒபைட் பின் ஜுமா பின் ஜூலம் நிறுவனம் படைத்துள்ளது. உபைட் என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 300 அடி நீளமும் 66 அடி அகலமும் கொண்டது. துபாய் டிபி வேர்ல்ட் அருகே நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை…

மேலும்...

துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்!

துபாய் (19 அக் 2020): விசா நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் துபாய் வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் துபாய் விமான நிலையத்தில் செய்வதறியாமல் சிக்கித் தவிக்கின்றனர். ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச…

மேலும்...

துபாய் வரும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை!

துபாய் (17 அக் 2020): ஐந்து நாடுகளில் இருந்து துபாய் செல்லும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறைகளை செயல்படுத்துமாறு விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன . துபாய் விமான நிலைய அதிகாரிகளின் சமீபத்திய அறிவுறுத்தல்களின்படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட…

மேலும்...

ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர். அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...