வேலையின்மையைதான் பதிவு செய்ய வேண்டும் குடியுரிமையை அல்ல – பிரகாஷ்ராஜ் அதிரடி!

ஐதராபாத் (20 ஜன 2020): இந்தியாவில் வேலையில்லாதவர்கள்தான் அவர்கள் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், “நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் அவர்கள்தான் அவர்களது நிலையை பதிவு செய்ய வேண்டும். மேலும் பலருக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை அதற்கான குறிக்கோள்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குடியுரிமை சட்டம் அவசியமற்றது” என்று தெரிவித்தார்.

மேலும்...

தமிழகம் இதில் இரண்டாவது இடம் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. வேலையில்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர்,…

மேலும்...