சென்னையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – ஒரே நாளில் 24 பேர் பலி!

சென்னை (26 ஜூன் 2020): சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் இன்று மட்டும் 24 பேர் பலியாகியுள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர, டெல்லியை அடுத்து தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை மிகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தனர். கே.எம்.சி. மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேரும்,ஓமந்தூரார் மருத்துவமனையில் 7 பேரும், ஸ்டாலின் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இதுவரை 70,977 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 911 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 39,999 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 17,296 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 407 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 15,301 பேர் உயிரிழந்த நிலையில் 2,85,637 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஹாட் நியூஸ்: