அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை!

சென்னை (28 மே 2020): அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது.

இதன் முதல் நடவடிக்கையாக, ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையவுள்ளது. இதற்கான புதிய பட்டியலும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு தொகுதிகளில் அதிக துடிப்புடன் உள்ளவர்களை கவனத்தில் கொண்டே பதவிகள் வழங்கப்படும் என்றும், சிபாரிசுகளுக்கு இடமில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேபோல் அதிமுகவின் சார்பு அணிகளான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளையும் வலுவாக கட்டமைக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும். அதிமுகவின் சார்பு அணிகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..