திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!

Share this News:

சென்னை (08 ஜூன் 2020): திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

61 வயதாகும் ஜெ. அன்பழகன் கடந்த 2-ம்தேதி மூச்சு திணறல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

3-ம்தேதி அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகியது. இதனால் மொத்த சுவாசிப்பில் 90 சதவீத ஆக்ஸிஜன் வென்ட்டிலேட்டர் வழியாக அவருக்கு செலுத்தப்பட்டு வந்தது. அடுத்த 2 நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு 40 சதவீத ஆக்ஸிஜன் வென்ட்டிலேட்டர் வழியே செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை அவரது உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம் அடைந்தது. அவருக்கு வென்ட்டிலேட்டர் மூலமாக கூடுதல் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அன்பழகனின் இதய மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும்அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Share this News: