உண்மை வெளியே வரும் வரை கேள்வி கேட்போம் – கமல்ஹாசன் அதிரடி!

440

சென்னை (21 ஜூன் 2020): மத்திய அரசிடமிருந்து உண்மை வெளியே வரும்வரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய சீன எல்லை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்லை விவகாரம் குறித்து கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

” எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” மத்திய அரசு லடாக் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பை பாதிக்காத வகையில் உண்மை நிகழ்வுகளை மக்களிடம் பகிர வேண்டும்.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

நாங்கள் கேள்விகளை தேசவிரோதமாக கருத முடியாது. கேள்விகளைக் கேட்கும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படை, நாங்கள் உண்மையைக் கேட்கும் வரை தொடர்ந்து கேட்போம். மக்களை உணர்ச்சிப்பூர்வமாக கையாள முயற்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்”

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.