வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் ஈனச்செயல்!

66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த வருட (2020) கோடைகாலத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் விசாரணைக்கு காத்திருந்த போது கொல்லப்பட்டார்.

இவர் அமெரிக்காவின் பணக்காரர்களுள் ஒருவர். அமெரிக்காவிலுள்ள பெரும் புள்ளிகளுடன் இவருக்கு தொடர்பு உண்டு எனத் தெரிகிறது.

2005 ம் ஆண்டு 14 வயது சிறுமியின் தாய் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். 14 வயதான தனது மகளை இவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்று வழக்கு பதிவு செய்தார். உடனடியாக ப்ளோரிடா மாகாணத்திலுள்ள பால்ம் பீச் காவல் அதிகாரிகள் இவரிடம் விசாரணை நடத்தினர். 2008ம் ஆண்டு இவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனால், சிறையில் தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் சிறையில் இருந்தார்.

அதன் பிறகு 6 ஜூலை 2019 அன்று “பாலியல் கடத்தல்” குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 10 ஆகஸ்ட் 2019 அன்று சிறையில் மரணமடைந்தார்.

இவர் சிறையில் தற்கொலை செய்து காெண்டதாக சிறைக்காவலர்கள் தெரிவித்தனர். ஆனால் இது தற்கொலை அல்ல கொலை தான் என்ற சர்ச்சை கிளம்பியது.

தற்போது ஜெப்ரி எப்ஸ்டீன் பற்றி பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. அவரைப் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளிப்பட்டிருக்கிறது.

அதாவது, கடந்த வருடம் இறந்து போன அமெரிக்காவின் முன்னாள் நிதியாளரும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டவரமான ஜெப்ரி எப்ஸ்டின் மற்றும் அவரது காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இஸ்ரேலிய உளவாளியாக பணிபுரிந்துள்ளனர். இவர்கள் அரசியல்வாதிகளை அச்சுறுதுவற்காக இளம்பெண்களை பயன்படுத்தி, அரசு தகவல்களை இஸ்ரேலுக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று முன்னாள் இஸ்ரேலிய உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இந்த ஜோடிகள் honey-trap operation “தேன் பொறி” நடவடிக்கை என்ற பெயரில் தனது உளவுப் பணியை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இவர்கள் அழகான இளம் பெண்களை தேர்வு செய்து உலகெங்கிலுமுள்ள முக்கிய அரசியல்வாதிகளிடம் அனுப்பியிருக்கிறார்கள். பிறகு அந்த அரசியல்வாதிகளை மிரட்டி தகவல்களை பெற்று இஸ்ரேலிய உளவுத்துறைக்கு வழங்கியிருக்கின்றனர்.

இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் முன்னாள் இஸ்ரேலிய உளவாளியான அரி பென் மெனாஷி என்பவர் “எப்ஸ்டின் : இறந்தவர்கள் எந்த கதைகளையும் கூறப் போவதில்லை” என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்களாவன:

கிஸ்லெய்னின் தந்தை ராபர்ட் மேக்ஸ்வெல் இந்த அரிபென் மெனாஷியை உளவு பணிக்காக கையாண்டிருக்கிறார். இங்கிலாந்தைச் சேரந்த ராபர்ட் மேக்ஸ்வெல் இஸ்ரேலிய உளவு நிறுவனத்தில் பணி புரிந்தவர். அவர் தான் தனது மகளான கிஸ்லெய்னையும் அவரது காதலனான ஜெப்ரியையும் இஸ்ரேலிய உளவு நிறுவனம் மொஸாத்தில் இணைத்திருக்கிறார்.

மேக்ஸ்வெல்லும் ஜெப்ரியும் 14 வயதான அரிபென் மெனாஷியிடம் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் ;
“இதோ பார், உடலுறவு கொள்வது தவறு கிடையாது. இது மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இவை குற்றமாகாது”.

அரி பென் மெனாஷி மேலும் கூறுகிறார் : ஆனால் 14 வயது சிறுமியிடம் உடலுறுவு வைப்பது தவறுதான். இவர்கள் 14 வயது சிறுமியான என்னை உளவு பணிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். என்னைப் போன்ற 14 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்ளும் அரசியல்வாதிகளை ரகசியமாக போட்டோ எடுத்து வைத்துக் கொள்வார்கள். பிறகு அந்த போட்டோவின் மூலம் அந்த அரசியல்வாதிகளை மிரட்டி தங்களுக்கு தேவையான ரகசியங்ஙளை பெற்றுக் கொள்வார்கள்.

இவ்வாறுதான் மேக்ஸ்வெல்லும், ஜெப்ரியும் தனது உளவு பணிகளை செய்திருக்கிறார்கள்.

உளவு பணிக்காக பயன்படுத்தப்பட்ட அரி பென் மெனாஷி ஈரானில் பிறந்த இஸ்ரேலிய தொழிலதிபர். 1977 முதல் 1987 வரை இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத்தில் பணிபுரிந்திருக்கிறார். இவர் மர்ம நபராகவே இருக்கிறார். 1989ஆம் ஆண்டு திடீரென்று “ஆயுதங்களை கையாண்டார்” என்ற குற்றத்திற்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பிறகு, அமெரிக்க நீதிமன்ற நடுவர்கள், இவர் இஸ்ரேலுக்காக பணிபுரிந்தவர் என்பதை ஏற்றுக் காெண்ட பின்னரே 1990ல் இவரை விடுதலை செய்தனர்.

“மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எஸ்டின்” இஸ்ரேலின் உளவு பணிக்காக டஜன் கணக்கான சிறுமிகளையும் பெண்களையும் பலி கொடுத்திருக்கிறார். அதில் 14 வயதுக்குள்ளான சிறுமி உட்பட மூன்று பெண்களை பலி கொடுத்ததற்கு கெஸ்லெய்ன் மேக்ஸ்வெல் உதவி செய்திருக்கிறார். அந்த குற்றத்திற்காக கடந்த வியாழக்கிழமை கெஸ்லெய்ன் மேக்ஸ்வெல் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழில் தொகுப்பு : இஸ்தப்ரக்