இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

கத்தார் (12 பிப்ரவரி 2024): இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த எட்டு இந்திய உளவாளிகளை கத்தார் அரசு விடுவித்தது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்த விடுதலையை அளித்தமைக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. நடந்தது என்ன? கத்தாரில் இயங்கி வரும் நிறுவனம் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் (Dahra Global Technologies & Consultancy Services W.L.L). இது, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கத்தார் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஆலோசனை மற்றும்…

மேலும்...
கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

கத்தார் சாலையில் ஸ்டண்ட் செய்த கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

தோஹா, கத்தார் (22 ஜனவரி 2024): தோஹா நகரின் சாலைகளில், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த கார் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றி நசுக்கி அழிக்கப்பட்டது. கத்தார் நகர சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “லேண்ட் க்ரூஸர்” கார் டிரைவர் ஒருவர் சாகசங்களைச் செய்தார். இதனை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்பு இந்த வீடியோ பல்வேறு சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வந்ததை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, ஸ்டண்ட் செய்த கார்…

மேலும்...
கத்தார் விசா மோசடியில் கைது!

விசா மோசடி தொடர்பாக கத்தாரில் கைது!

தோஹா, கத்தார் (14 ஜனவரி 2024): போலி நிறுவனங்களின் பெயரில் விசா மோசடி-யில் ஈடுபட்ட நபரை கத்தார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கத்தார் நாட்டில் சட்டப்பூர்வமான வழிகளைத் தவிர்த்து பிற வழிகளில் விசா பெறுவது சட்டவிரோதச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்நேரம்.காம்) “ஆசாத் விசா” என்ற பெயரில், போலி நிறுவனங்களின் பெயரில் பல்வேறு நபர்கள் விசா மோசடி-யில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கத்தார் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. விசாவை விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கும், விசாவைப் பெறுவருக்கும் தொடர்பு ஏதுமின்றி இடைத்…

மேலும்...
ஹைடெக் ஸ்டேடியம்

அதிசய வைக்கும் சவூதியின் ஹைடெக் ஸ்டேடியம்!

ரியாத், சவூதி (16 ஜனவரி 2024): ரியாத் அருகே 200 மீட்டர் உயரமுள்ள குன்றின்மீது ஹைடெக் ஸ்டேடியம் அமைக்கிறது சவூதி அரசு. இந்த விளையாட்டு அரங்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வடிவமைப்பை சவுதி அரேபியா அரசு நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது. சவூதி அரேபியா நாட்டில் எதிர்வரும் 2034 ஆண்டு உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டு நடைபெற உள்ளது. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பிராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக்…

மேலும்...
சிறந்த சுற்றுலா தளங்களைக் கொண்ட நகரங்கள்

இந்த ஆண்டின் டாப் 20 சுற்றுலா தளங்கள் எவை தெரியுமா?

பாரிஸ், பிரான்ஸ் (13 டிசம்பர் 2023): இந்த ஆண்டின் தலை சிறந்த சுற்றுலாத் தளங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாரிஸ் நகரம், உலகின் மிகச் சிறந்த சுற்றுலா நகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது. உலகின் சிறந்த 100 நகரங்களை, பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கும் நிறுவனம் யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) ஆகும்.  இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது. இது 2023 ஆண்டின் உலகின் சிறந்த சுற்றுலாத் தளங்களைக் கொண்ட நகரங்களை அறிவித்துள்ளது. சிறந்த சுற்றுலா நகரம்…

மேலும்...

வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ஆதரவு (Support):…

மேலும்...

என் மகள் காஸா-வில் ஒரு ராணியாக உணர்ந்தாள் – இஸ்ரேலிய தாய் எழுதிய கடிதம்!

பாலஸ்தீன் (29 நவம்பர் 2023): ஹமாஸ் போராளிகள் சமீபத்தில் விடுவித்த பெண் பிணைக் கைதி, டேனியல் அலோனி (Danielle Aloni).  இவர், ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி கூறி ஹீப்ரு மொழியில் எழுதியுள்ள கடிதம் உலகை அதிர வைத்துள்ளது.  இக் கடிதத்தில், ஹமாஸ் படையினரின் நன்னடத்தைக்கும் பிணைக் கைதிகளைப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டமைக்கும் நன்றி கூறியுள்ளார். இஸ்ரேலின் மொஸாத், ஒரு சக்தி வாய்ந்த உளவுப்படை என உலகம் நம்பிக் கொண்டிருக்கும் அமைப்பு ஆகும். கடந்த அக்டோபர் 07 ஆம்…

மேலும்...

தொற்றுநோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!

பாலஸ்தீன் (27 நவம்பர் 2023): கடந்த 50 நாட்களாக நிலவும் போர்ச் சூழலில், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களால் அடியோடு நிலைகுலைந்து போயுள்ளது காஸா நகரம்.  இந்த போர்ச்சூழல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நான்கு நாட்கள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. போர் பதட்டத்தின் காரணமாக காஸாவில் வசிக்கும் 17 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான உயிர் இழப்புகளால், பிணங்களை ஒரே புதைகுழியில் அடக்கம் செய்து வருகின்றனர். இச்சூழலில், காஸா…

மேலும்...

பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது. தரை வழியாகவோ, வான்…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...