சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர்…

மேலும்...

பசு கடத்தல் வழக்கில் 22 வயது இளைஞர் முஹம்மது அமீனுக்கு ஆயுள் தண்டனை!

புதுடெல்லி (21 ஜன 2023): பசுக்களை கடத்திய வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் விசித்திர தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், தெப்சி மாவட்டத்தின் நிஜார் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு டிரக்கில் 16 மாடுகளைக் கொண்டு சென்றபோது, மாடுகளை கடத்தியதாக அமீன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு குஜராத் வியாராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை…

மேலும்...

யோகி ஆதித்யநாத் இல்ல காவல் படை வீரர் மர்ம மரணம்!

லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் அலிகாரி நகரின் கெய்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அரசு வாகனத்தில் தனது முகாமுக்கு அவர் திரும்பியுள்ளார்….

மேலும்...

தலைவர்களுக்கிடையே போர் – உடைகிறதா ராஜஸ்தான் காங்கிரஸ்?

புதுடெல்லி (21 ஜன 2023): ராஜஸ்தானில் அசோக் கெலாட்-சச்சின் இடையே நடந்த வார்த்தைப் போரால் காங்கிரஸ் தேசிய தலைமை அதிருப்தியில் உள்ளது. இந்த புதிய சர்ச்சை எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கவலை கொள்கிறது. தலைவர்களுக்குள் வார்த்தைப் போர் நடக்கும் போது தேசிய தலைமை தலையிட்டு சரிசெய்யும். எனினும் சில இடைவெளிக்குப் பிறகு, தலைவர்கள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவார்கள். 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் இதுதான் நிலைமை. சமீபத்திய வினாத்தாள்…

மேலும்...

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படம்!

லண்டன் (20 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவண படம் உலக அளவில் விவாத பொருளாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி பிபிசி குஜராத் இனப்படுகொலை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. பிபிசி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி.இம்ரான் ஹூசைன் நேற்று பிரச்சினை எழுப்பினார். அப்போது…

மேலும்...

பாஜக எம்பிக்கு எதிரான இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் – ஒன்றிய அரசுக்கு நெருக்கடி!

புதுடெல்லி (20 ஜன 2023): பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அவரை பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் எனக்கூறி டெல்லி ஜந்தர்…

மேலும்...

இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடி லூட்டி – வைரல் வீடியோ!

லக்னோ (18 ஜன 2023): உத்திர பிரதேசத்தின் பரபரப்பான சாலையில் இருசக்கர வாகனத்தில் காதல் ஜோடிகள் கட்டிப்பிடித்தபடி லூட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் இந்த காதல் ஜோடிகள் இரு சக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்தபடி லூட்டியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லக்னோ போலீசார் தற்போது அந்த காதல் ஜோடிகளை தேடி வருகின்றனர். காதல் ஜோடிகளின் பின்னால் சென்ற வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில்…

மேலும்...

அடுத்த பிரதமர் யார்? – அமித்ஷா பதில்!

புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று அமித் ஷா கூறினார். 2023ல் ஒன்பது மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும், அடுத்த லோக்சபா தேர்தலையும் நட்டா தலைமையில் பா.ஜ., சந்திக்கும்.நட்டா தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக அமித்ஷா கூறினார். குஜராத்தில்…

மேலும்...

ஆர் எஸ் எஸ் அலுவலகம் செல்ல, என் தலை வெட்டப்பட வேண்டும் -ராகுல் காந்தி!

புதுடெல்லி (17 ஜன 2023): காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்துள்ள ராகுல் காந்தி, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல் காந்தி இன்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது….

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி மசூதி இடிப்பு!

பிரக்யாராஜ் / அலஹாபாத் (17 ஜன 2023): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி மசூதி பொதுப்பணித் துறையால் இடிக்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் (அலஹாபாத்) ஹண்டியா பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷெர்ஷா சூரி காலத்தில் கட்டப்பட்டது இந்த மசூதி. தற்போது ஜிடி சாலையை விரிவு படுத்துவதற்காகவே இந்த மசூதி இடிக்கப்பட்டது என்று பொதுப் பணித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசூதியை இடிப்பதற்கான முன்மொழிவுக்குத்…

மேலும்...