அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை (28 செப் 2020): அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. * அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு…

மேலும்...

திமுக முக்கிய புள்ளிக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (28 செப் 2020): திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 5,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச்செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று…

மேலும்...

21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!

சென்னை (26 செப் 2020): 21 குண்டுகள் முழ ங்க மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தநிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர்…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை  வட்டாரம் தெரிவித்துள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்….

மேலும்...

தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று!

சென்னை (24 செப் 2020): தேமுதிக தலைவர் விஜய்காந்த் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்காந்த் விரைவில் குணமடைய வேண்டும் என…

மேலும்...

இந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்!

அரியலூர் (23 செப் 2020): இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கு மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 72) கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி…

மேலும்...

திமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி!

மதுரை (23 செப் 2020): அழகிரி திமுகவில் மீண்டும் இணைந்துள்ள உறுப்பினர் அட்டை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர…

மேலும்...

திருப்பூரில் விசாரணை கைதி மர்ம மரணம்!

திருப்பூர் (22 செப் 2020): திருப்பூரில் சென்ற கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணம் அடைந்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்காக வந்த கோட்டாட்சியரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்...

விவசாயிகள் தீவிரவாதிகள் – கங்கனா ரானாவத் பரபரப்பு விமர்சனம்!

ஜலந்தர் (21 செப் 2020): “வேளாண் மசோதாவுக்கு போராடி வரும் விவசாயிகள் தீவிரவாதிகள்” என்று நடிகை கங்கனா ரானாவத் பகிரங்கமாக விமர்சனம் வைத்துள்ளார். https://twitter.com/KanganaTeam/status/1307946243339907072?s=19 வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பு நடத்தினால், தோற்கடிக்கப்படும் என்ற அச்சத்தில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது. பஞ்சாப் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் வெடித்து…

மேலும்...

விடுதலைக்கு தயாராகும் சசிகலா!

சென்னை (21 செப் 2020):சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிடில்…

மேலும்...