பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!

மும்பை (25 மே 2020): பிரபல இந்தி மற்றும் பெங்காலி நகைச்சுவை நடிகர் மோஹித் புற்று நோயால் உயிரிழந்தார்.

கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருடைய உடலில் நோய் தீவிரமடைந்ததால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது.

உவா’, ‘மிலன் டாக்கீஸ்’ சல்மான் கானுடன் ‘ரெடி’, பரினீதி சோப்ராவுடன் ‘ஜபாரியா ஜோடி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோஹித். ராணி முகர்ஜி, சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகும் ‘பண்டீ அவுர் பப்ளி 2’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: