பிரபல தமிழ் நடிகர் மற்றும் நடிகை தற்கொலை!

சென்னை (06 ஜூன் 2020): தமிழ் டிவி நடிகர் ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரி ஜெய கல்யாணி இருவரும், சென்னையில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகர்களின் சிதைந்த உடல்கள் சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. நடிகர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையினருக்கு புகார் கூறியுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  விஜயகாந்த் மனைவி பிரேமலதா மருத்துவமனையில் அனுமதி!

உடனே அங்கு வந்த காவல்துறையினர் உடலை வீட்டிலிருந்து மீட்டு ​​பிரேத பரிசோதனைக்கு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது.

நடிகர்கள் இருவரும் COVID-19 காலகட்டத்தில் வேலை இல்லாத நிலையில் நிதி சிக்கல்களை சந்தித்து வந்தனர். எனவே அவர்கள் தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.