இந்தியாவில் ஒரே நாளில் 18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று!

117

புதுடெல்லி (27 ஜூன் 2020): இந்தியாவில் ஒரே நாளில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் ஒரே நாளில், நாடு முழுதும், 18 ஆயிரத்து, 552 பேரிடம், கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 08 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  பதைபதைக்கும் பாலிவுட் - அமிதாபை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று!

மேலும் ஒரு லட்சத்து, 97 ஆயிரத்து 387 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து 881 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 384 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.