ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் – முதல்வர் பிணராயி விஜயன் தகவல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரள மாநிலத்தில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன.

இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.

இந்தச் சூழலில் வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் நாடு முழுவதும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது.

இதைப் படிச்சீங்களா?:  மிசோரத்தில் திடீர் நிலநடுக்கம்!

இந்தநிலையில் கேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள மால்கள், உணவகங்களும் வரும் 9-ம் தேதி திறக்கப்பட்டு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்படும் என்றும் சபரிமலை கோவிலில் 50 பேர் வரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.