வெட்டுக்கிளியின் வருகையை நியாயப்படுத்தி குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டிய முன்னாள் நடிகை!

மும்பை (29 மே 2020): வெட்டுக்கிளியின் வருகை இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் இதனை நியாயப்படுத்தி குர்ஆன் வசனத்தை சுட்டிக் காட்டி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் முன்னாள் நடிகை சாய்ரா வசீம்.

சாய்ரா வசீம் அமீர்கானின் டங்கல் படத்தின் மூலம் பிரபலமானார். ஆனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில், சினிமாவிலிருந்து விலகினார். இஸ்லாம் சினிமாவை ஆதரிக்கவில்லை என்றும் அதுகுறித்து அறியாமல் சினிமாவில் நடித்துவிட்டேன் என்றும் கூறி அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

சமீபத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இந்தியாவின் வடமாநிலங்களில் பல விவசாய பயிர்களை அழித்து வருகிறது. கொரோனா பரவல் ஒருபுறமிருக்கு வெட்டுக்கிளியின் வருகை இந்தியாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுக்கிளிகளால் ராஜஸ்தானில் 50 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளி கூட்டத்தில் ஒரு பிரிவு மத்திய பிரதேசத்திலும் புகுந்துவிட்டது.

இதைப் படிச்சீங்களா?:  மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

இந்நிலையில் வெட்டுக்கிளியின் வருகை குறித்து சாய்ரா வசீம் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திருகுர்ஆனில் வெட்டுக்கிளி குறித்து வரும் ஒரு வசனத்தை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டு உள்ளார்.

சாய்ரா வசீமின் கருத்து பல தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.