வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் பிரபல நடிகர்!

Share this News:

திருவனந்தபுரம் (12 மே 2020): வளைகுடாவில் ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகளுக்கு நடிகர் மம்மூட்டி தலைமையில் இலவச விமான டிக்கெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தின் பிரபல டிவி சேனலான கைரேலி, இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வளைகுடாவில் வேலையின்றி, பணமின்றி சிக்கித் தவிக்கும் கேரள ஏழை மக்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்க கைரேலி சேனல் முன் வந்துள்ளது.

பிரபல நடிகர் மம்மூட்டி தலைமையில் இத்திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது. அதன்படி வளைகுடாவில் பணிபுரியும் 1,000 நபர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என்று கைரேலி சேனலின் இயக்குநர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த உங்கள் நண்பர்கள் இருப்பின், இந்த திட்டத்தில் இடம் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

United Arab Emirates (UAE)
Kairali TV Door No.3204,
32nd Floor Liwa Heights Jumeirah Lakes Towers Dubai,
UAE Call: +971 044341348 +971 50 6515722
Fax : +971 044341349

இமெயில் & இணைய தள முகவரி:
malayalam@kairalitv.in

Contact


Share this News: