1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?

1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி? கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்: 1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள். 2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள். அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள் இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள் 3. இதில், 1987 ஜூலை…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை!

புதுடெல்லி (11 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளளார். அவரது வருகையை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 16ஆம் தேதி…

மேலும்...

சிகரம் தொட்ட இந்திய சிறுமி!

அர்ஜெண்டினா (10 பிப் 2020): அகோன்காகுவா சிகரத்தில் ஏறி உலக சாதனை 12 வயது இந்திய சிறுமி காம்யா கார்த்திகேயன். தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள ஆண்டஸ் மலைகளில் அமைந்துள்ள அகோன்காகுவா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 962 மீட்டர் (22841.21 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. எண்ணத்தால் கூட எட்ட முடியாத சிகரம் இது. இந்த சிகரத்தின் உச்சியை ஆந்திராவைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற 12 வயது சிறுமி எட்டிப்படித்து சாதனை படைத்துள்ளார்….

மேலும்...

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி!

போட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்…

மேலும்...

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் – ஒருவர் பலி!

புல்வாமா (09 பிப் 2020): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது குலாம் நபி மிர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குலாம் நபி மிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிறு (09 பிப்) மாலை 07:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குலாம் நபி மிர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த…

மேலும்...

கொரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (09 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: , கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த…

மேலும்...

அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்…

மேலும்...

கேரள மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ்!

திருவனந்தபுரம் (03 பிப் 2020): கேரளாவில் மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது சீனாவை தொடர்ந்து ஆசியாவின் பிற நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன்…

மேலும்...

இந்தியாவை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாகிஸ்தான் மாணவர்கள் கதறல்!

பீஜிங் (03 பிப் 2020): சீனாவில் பயிலும் பாகிஸ்தான் மாணவர்கள் மீட்கப் படாமல் இருப்பதற்கு பாகிஸ்தான் மாணவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலானோர் மீட்கப் பட்டு வரும் நிலையில், வுஹான் நகரில் பயின்று வரும் பாகிஸ்தானை சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவர்கள் தங்களையும் மீட்க வேண்டும் என பாகிஸ்தான்…

மேலும்...

கேரளாவில் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

திருவனந்தபுரம் (02 பிப் 2020): கேரளாவில் இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பல ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இதனையடுத்து அங்குள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் வூஹான் பல்கலையில் படித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேந்த மாணவி சொந்த ஊரு திரும்பினார். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், கொரோனா வைரசால் மாணவி பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி…

மேலும்...