உக்ரைன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமா?

மாஸ்கோ(28 பிப் 2022): அணு ஆயுத படையை தயார் நிலையில் வைத்திருக்க அதிபர் புடின் உத்தரவிட்ட நிலையில், அதற்கு ஐ.நா, நேட்டோ, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே அடுத்த 24 மணி நேரம் குறித்து உக்ரைன் அதிபர், இங்கிலாந்து அதிபரிடம் பேசியிருப்பது பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படைகளின் தாக்குதல் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 14 குழந்தைகள் உட்பட 352 பேர்…

மேலும்...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள்!

புதுடெல்லி (28 பிப் 2022): உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம்…

மேலும்...

ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – ஒப்புக்கொண்ட ரஷ்யா!

மாஸ்கோ (28 பிப் 2022): உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா…

மேலும்...

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க 27 நாடுகள் ஒப்புதல்!

பாரிஸ்(26 பிப் 2022): உக்ரைனுக்கு 27 நாடுகள் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றன. இந்தசூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரபடுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக…

மேலும்...

உணவு, குடிநீர் கிடைக்கவில்லை – உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர் தகவல்!

தேனி (26 பிப் 2022): உக்ரைனில் மாணவர்களுக்கு குடிநீரோ உணவோ கிடைப்பது இல்லை என்று உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனீ மாணவர் தெரிவித்துள்ளார். உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் போர் துவங்குவதற்கு சற்று முன்பு உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனி மாணவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில் “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

மேலும்...

ரஷ்யாவுக்கு எதிராக உலகெங்கும் வலுக்கும் போராட்டம்!

அர்ஜென்டினா (26 பிப் 2022): உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உலக அளவில் போராட்டம் வெடித்துள்ளது. அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். ரஷ்யாவை கண்டித்தும், போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர். உக்ரைனில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலை குறித்து போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்….

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை!

மாஸ்கோ (24 பிப் 2022): உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர்…

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்!

ஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 176 பயணிகளின் உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்தபோது கூறி வந்தது ஈரான். மூன்று நாட்கள் கடந்த…

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள்: ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது….

மேலும்...