தமிழக பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்!

புதுடெல்லி (13 ஜன 2020): தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னான பிறகு புதிய தலைவராக எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலருடைய பெயர்கள் அடிபட்டன. சமீப காலமாக மாநில துணைத்தலைவர்கள் கருப்பு முருகானந்தம், குப்பு ராமு, நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் யாருக்கு மாநில தலைவர் பதவி…

மேலும்...

தமிழக அரசு மீது மீது எச்.ராஜா தாக்கு!

சென்னை (13 ஜன 2020): தமிழகத்தில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டதாகவும் அரசு அதனை சரிவர கண்டு கொள்ளவில்லை என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் கொலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பேசி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மிகக்கடுமையாக இருக்கிறது. ஆகவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளி முஸ்லீமாக இருந்தால் எதிர்க்கட்சிகள் வாயில் பிளாஸ்டிக் போட்டு ஒட்டிப்பாங்க என்றும்…

மேலும்...

சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மரணம்!

புதுக்கோட்டை (12 ஜன 2020): புதுக்கோட்டை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி…

மேலும்...

நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (11 ஜன 2020): சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், நிலத்தடி நீரை பாதுகாக்க, கடந்த 1987ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்காக இயற்றப்பட்ட…

மேலும்...

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்கள் – முறிகிறதா கூட்டணி?

சென்னை (11 ஜன 2020): திமுக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இன்றி மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீா்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த…

மேலும்...

தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக…

மேலும்...

நாசாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தமிழக மாணவிக்கு அழைப்பு!

அருப்புக்கோட்டை (10 ஜன 2020): அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய சிறப்புத் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 வகுப்பு மாணவி லட்சுமிபிரியா தேர்வாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத் தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார்-தீபா தம்பதியினர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.அவர்களில் மூத்த மகளான லட்சுமிபிரியா என்பவர் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து…

மேலும்...

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர்தானம்!

சென்னை (09 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக அதிக வாய்ப்பு மஹாலக்ஷ்மிக்கே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜ.க-வுக்கு அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளவர் என்று சிலரின் பெயர்களை அவ்வப்போது பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் பரப்பி வருகின்றனர். ஆனால், `அவர்களெல்லாம் கிடையாது. அடுத்து தலைவராகப் போகிறவர் எங்கள் அக்காதான்’ என்கிறார்கள் மஹாலக்ஷ்மியின் ஆதரவாளர்கள். “பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். பல மொழிகள் தெரியும். இவர் படிக்காத படிப்பே இல்லை,…

மேலும்...

உட்கார் என்ற அன்பழகன் – தடை விதித்த சபாநாயகர்!

சென்னை (07 ஜன 2020): உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஒருமையில் பேசியதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது பேசிய திமுக MLA ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர், சட்டம்…

மேலும்...

வட மாநிலங்களுக்கு 5908 கோடி, தமிழகம் கேரளாவுக்கு நாமம்!

புதுடெல்லி (06 ஜன 2020): வெள்ள நிவாரணமாக வட மாநிலங்களுக்கு 5908 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்துள்ள மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு பெப்பே காட்டிவிட்டது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு 5,908.56 கோடி ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் உத்திர பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும். ஆனால் பெரிதும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கேரளாவுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யபப்டவில்லை. அதேபோல கஜா புயலால் மிகப்பெரிய…

மேலும்...