இவ்வருடம் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின்(LA-NINA, IOD) அடிப்படையில் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (18 ஆக 2020): தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில்…

மேலும்...

மகிழ்ச்சியில் சென்னை மக்கள் – காரணம் இதுதான்!

சென்னை (11 ஆக 2020): சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீரென பெய்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் குறைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, சேப்பாக்கம், மெரினா, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனப் போக்குவரத்துக்குச்…

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்!

திருவனந்தபுரம்(07 ஆக 2020): கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80…

மேலும்...

மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

மும்பை (04 ஜூலை 2020): கொரொனாவால் மகாராஷ்டிர பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வானிலை மைய்யம் அறிவிப்பால் பீதியில் உள்ளனர் மும்பை மக்கள். மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் புரண்டு ஓடியது. இதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதில் தாதர், மாட்டுங்கா, வோர்லி, லால்பாக், கிங் சர்கிள், சியன், குர்லா, அந்தேரி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் அந்தேரி சுரங்க பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை…

மேலும்...

பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலி!

பாட்னா (25 ஜூன் 2020): பீகாரில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 83 பேர் பலியாகியுள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா,…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (20 ஜன 2020): தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலைவும். கடந்த 24 மணிநேரத்தில் திருவாரூர் மாவட்டம், பாண்டவையாறு, நீடாமங்கலம் தலா…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...

துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும்...

துபாயில் இடியுடன் கூடிய பலத்த மழை – வீடியோ!

துபாய் (11 ஜன 2020): துபாய் அல் அய்ன் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இரவு இடி சத்தத்துடன் மழை பெய்துள்ளது. சமூக வலைதளங்களில் இதன் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...