ஊரடங்கால் ஒரு பலனும் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி (26 மே 2020): கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை. கொரோனா பாதிப்பை…

மேலும்...

கொஞ்சம் நிறுத்தி வைங்க – பிரதமருக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை (22 மே 2020): விமான சேவையை இப்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதன்படி, வரும் 25 ஆம் தேதி முதல் நாடு…

மேலும்...

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிக்கான அறிவிப்பு எங்கே? – ப.சிதம்பரம் அதிர்ச்சி கருத்து!

புதுடெல்லி (18 மே 2020): கொரோனா வைரஸுக்கு பின்னான காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடியில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு பொருளாதார திட்டங்களை வெளியிட்டார். தற்போது, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதிர்ச்சி தரும் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ப.சிதம்பர்ம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ” பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடிகளுக்கான…

மேலும்...

பிரதமர் நிதி குறித்து பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்!

புதுடெல்லி (14 மே 2020): “PM-CARES, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து எல்லோரும் செய்யும் தவறை செய்து விடாதீர்கள். இந்த தொகையானது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் தரப்படாது. என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட தொகையானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு…

மேலும்...

அரசுத் தரப்பிலிருந்து வருவது 4 லட்சம் கோடி மட்டுமே – கபில் சிபல் பகீர் தகவல்!

புதுடெல்லி (14 மே 2020): நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையில், அரசிடம் இருந்து வரும் தொகை 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அரசிடமிருந்து வரும் உண்மையான நிவாரணத் தொகை 4…

மேலும்...

கோவிட் -19 இல் மோடி செய்த தவறை எவ்வாறு சரிசெய்ய முடியும்?: ராமச்சந்திர குஹா

கொரோனா விசயத்தில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் எவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.? அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா வெளியிட்டுள்ள முழு கட்டுரையின் தமிழாக்கம். COVID-19 ஐ அடுத்து, உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜூம் வழியாக வகுப்புகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய தொலைதூரக் கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. வயதானவர்களுக்கும் இது பெரிதும் உதவியாக இருக்கும். எனவே, இந்த…

மேலும்...

ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி அதிரடி!

புதுடெல்லி (12 மே 2020): கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேவேளை ஊரடங்கு 4.0 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு (மே 12) 8 மணியளவில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், “20 லட்சம் கோடி:…

மேலும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சென்னை (12 மே 2020): தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று ( மே 12ம் தேதி), தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல்வர் பழனிசாமிக்கு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமியின் பிறந்தநாளை, கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டுவிட்டரில் #HBDEdapadiyaar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். மேலும் பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும்…

மேலும்...

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (10 மே 2020): நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 17-ம் தேதியுடன் முடியும் நிலையில் பிரதமர் மோடி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 5-வது முறையாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 3-வது ஊரடங்கு அமலில் இருக்கும் இருக்கும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள…

மேலும்...

மோடியை பின் தொடர்வதை நிறுத்திய வெள்ளை மாளிகை!

வாஷிங்டன் (29 ஏப் 2020): ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்ந்து வந்த வெள்ளை மாளிகை தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. 22 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்ட வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் அலுவலகம் ஆகிய டுவிட்டர் கணக்குகளை பின் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், தற்போது மோடி, ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் கணக்குகளை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது.. தற்போது வெறும்…

மேலும்...