உயிருடன் புதைத்துவிடுவேன் – பாஜக பிரமுகர் மிரட்டல் பேச்சு!

அலிகார் (14 ஜன 2020): பிரதமர் மோடி குறித்து பேசுபவர்களை உயிருடன் புதைத்துவிடுவேன் என்று பாஜக பிரமுகர் வெறித்தனமாக பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள்…

மேலும்...

மாணவர்களை நேரடியாக சந்திக்க தைரியம் உண்டா? – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (13 ஜன 2020): மாணவர்களை சந்திக்க மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த…

மேலும்...

மோடி என்னிடம் பேரம் பேசினார் – ஜாகிர் நாயக் பரபரப்பு தகவல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரது நேரடி உத்தரவின் பேரில் இந்திய அரசின் பிரதிநிதி ஒருவர் தம்மை சந்தித்துப் பேசியதாகத் இஸ்லாமிய மத போதகர் ஜகிர் நாயக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தாம் தகுந்த பாதுகாப்புடன் இந்தியா திரும்ப வழிவகை செய்யப்படும் என அந்தப் பிரதிநிதி தம்மிடம் உறுதியளித்ததாகவும் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார். ஜாகிர் நாயக்கின் கூற்று…

மேலும்...

எங்கே நிதியமைச்சர்? – சர்ச்சையாகும் மோடியின் நிதி தொடர்பான கூட்டம்

புதுடெல்லி (09 ஜன 2020): நிதி தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது விவாத பொருளாகியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பொருளாதார வல்லுனர்களுடன் இரண்டு மணி நேர சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பங்கேற்கவில்லை. அது ட்விட்டரில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

மேலும்...

மோடியின் தொகுதியான வாரணாசியில் ஏபிவி படுதோல்வி!

வாரணாசி (09 ஜன 2020): வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை…

மேலும்...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி…

மேலும்...

மோடி அமித் ஷா விருப்பம் நிறைவேறுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை (08 ஜன 2020) மாணவர்கள் மீதான வன்முறை சம்பவத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் விரும்பியது நடந்து கொண்டு இருக்கிறது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுபடுத்துகிறது என அக்கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்தநிலையில், இந்த சம்பவத்தில் பிரதமர்…

மேலும்...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ….

மேலும்...