தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (30 செப் 2022): சிஏஏ வழக்கில் 2019 முதல் சிறையில் உள்ள ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதால் தொடர்ந்து அவர் காவலில் இருக்க நேர்ந்துள்ளது. கடந்த. 2019 ஆம் ஆண்டு ஜாமியா நகர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பேசிய உரைக்காக ஷர்ஜீல் இமாம் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். ஷர்ஜீல் இமாம் மீது பல வழக்குகள்…

மேலும்...

பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் – பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி கோரிக்கை!

புதுடெல்லி (13 டிச 2021): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தின் போது அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள் மீது தண்டனைச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி தெரிவித்துள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உறுப்பினர் டேனிஷ் அலி பேசுகையில், CAA-2019 ஐ அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார். மேலும்…

மேலும்...

சிஏஏ மற்றும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி!

சென்னை (22 ஜூன் 2021): 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். என்று தெரிவித்தார். மேலும் ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மேலும்...

சிஏஏ போராட்டக்காரர்களின் ஜாமீனை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (18 ஜுன் 2021): சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப் இக்பால் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மூவரையும் உபா சட்டத்தில் கைது செய்த டெல்லி போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் ஜாமீன் மீதான விசாரணையின்போது டெல்லி உயர் நீதிமன்றம் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின்…

மேலும்...

சிஏஏ ரத்து – முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சிஏஏ ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெஇவித்ததாவது: * கூடுதலான தடுப்பூசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும். * செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாகச் செயல்பட வைக்கவேண்டும். * தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி…

மேலும்...

போராட்டம் நடத்துவது தீவிரவாதமாகாது – சிஏஏ போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (16 ஜூன் 2021): போராட்டம் நடத்துவது தீவிரவாதம் இல்லை என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஆஷிப் இக்பால் ஆகிய சிஏஏ போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டம் தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப்…

மேலும்...

சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (12 ஏப் 2021): சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இளைஞர்கள் மீது போலீசார் பதிவு செய்த எப் ஐ ஆரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜாபர் சாதிக் என்பவர் மீதும் ஒரு சில இளைஞர்கள் மீதும் சி ஏஏ போராட்டத்தின்போது பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்தியதாகவும் , சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் சாதிக் உள்ளிட்டவர்கள் மீது புகார் செய்தார். இது குறித்த வழக்கு சென்னை…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் – ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

சென்னை (14 மார்ச் 2021): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போன்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சில திருத்தங்கள்” எனக் குறிப்பிட்டு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021 தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள – வாக்குறுதி 43-ல், “விவசாயிகளுக்கு எதிரான சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பதையும்;…

மேலும்...

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

கடையல்லூர் (19 பிப் 2021): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பேசும்போது தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்ததியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும். சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும். கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும்…

மேலும்...

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ்குமார் காட்டம்!

பாட்னா (05 நவ 2020): பிகாரில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நிதிஷ் பேசிய பேச்சு , நிதிஷ் குமார் பாஜக கூட்டணி இடையே பிளவை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடுமையாக சாடி பேசினார். பிகாரில் ஊடுருவியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று யோகி பேசிய பேச்சு, நிதிஷ்குமாரை ஆவேசப்பட்ட வைத்துள்ளது. கதிஹாரில் நடந்த பேரணியில் பேசிய யோகி ஆதித்யநாத்,…

மேலும்...