கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு – கெஜ்ரிவால் அரசு அனுமதி!

புதுடெல்லி (29 பிப் 2020): ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசுக்கு போலீஸ் தரப்பு டெல்லி அரசுக்கு அனுமதி கோரியிருந்தது. இதனை ஏற்று கொண்ட டில்லி…

மேலும்...

நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள், சாவர்க்கரின் பிள்ளைகளல்ல – ரஜினியை விளாசிய ஜேஎன்யூ மாணவர் தலைவர்!

சென்னை (23 பிப் 2020): மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு ஜே.என்.யு மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அனைவருக்குமான கல்வியை உறுதி படுத்த வேண்டும், கல்வியை தனியார்மயமாக்கக் கூடாது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கு பெற்ற ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது,…

மேலும்...

சாமியாரான மாணவர் பாலியல் வழக்கில் கைது!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர் ராகவேந்திர மிஸ்ரா என்ற இளம் சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். ஜே.என்.யூவில் சமஸ்கிருத பாடத்தில் பி ஹெச் டி பயிலும் ராகவேந்திர மிஸ்ரா, மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்துத்வா சிந்தனை கொண்ட ராகவேந்திர மிஸ்ரா, ஜே.என்.யூவில் முஸ்லிம் மாணவர்களுக்கு…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...

நடிகை தீபிகா படுகோனுக்கு பாபா ராம்தேவ் அட்வைஸ்!

புதுடெல்லி (17 ஜன 2020): “என்னிடம் நடிகை தீபிகா படுகோன் ஆலோசனை பெற்றால் அவருக்கு எந்த பிரச்சனையும் வராது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள்மீது இரவு நேரத்தில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் தீபிகா படுகோனுக்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும்…

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் யார் என்பது தெரிந்தது!

புதுடெல்லி (13 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஏபிவிபியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு…

மேலும்...

தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம். பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்…

மேலும்...

கேள்விகளால் பாஜக தலைவரை பிழிந்தெடுத்த கன்னையா குமார் – வீடியோ!

புதுடெல்லி (11 ஜன 2020): ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பான விவாத மேடையில் பாஜக தலைவரை அலற விட்டுள்ளார் கன்னையா குமார். சமீபத்தில் இந்துத்வா அமைப்பினரால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கொடூரமாக தாக்கப் பட்டனர். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா டிவி நடத்திய விவாதம் ஒன்றில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சங்க தலைவரும் தற்போதைய சிபிஎம் தலைவருமான கன்னையா குமார் மற்றும் பாஜக தலைவர் அமிதாப் சின்ஹா ஆகியோர்…

மேலும்...

டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…

மேலும்...

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்காக பழி வாங்கப்படுகிறாரா தீபிகா படுகோன்?

மும்பை (09 ஜன 2020): தீபிகா படுகோன் நடித்த சபாக் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆசிட் வீச்சு சம்பவம் தொடர்பான உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் சபாக். ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் சமீபத்தில் தனது ட்ரைலரினை வெளியிட்டது. மேலும் இத்திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக…

மேலும்...