முடிவுக்கு வந்தது பிபிசி அலுவலக சோதனை!

மும்பை (17 பிப் 2023): பிபிசியின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. பிபிசியின் 100 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற செயலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. வருமான வரித்துறையினர் 10 ஆண்டு கணக்குகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர். நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் பிபிசி தரப்பில் எதிர்மறையான அணுகுமுறை இருந்ததே சோதனைகளுக்கு காரணம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், அவர்களின் தனிப்பட்ட…

மேலும்...

பிபிசி ரெய்டு – ஊடக சுதந்திரம் பாழடிப்பு: ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (14 பிப் 2023): பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில் ‘எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக…

மேலும்...

இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் திடீர் சோதனை!

மும்பை (14 பிப் 2023): மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் வெளியானதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனிடையே 2002 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய வன்முறை தொடர்பாக பிரதமர்…

மேலும்...

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான் நடித்த பதான் படத்திற்கு எதிராக திரையரங்கம் முன்பு நடந்த போராட்டத்தின் போது பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்க முஹம்மது நபியை இழிவுபடுத்து வகையில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எழுப்பட்ட முழக்கங்கள் சர்ச்சையாகி எதிர்ப்பு வலுத்து பல முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து குற்றவாளிகள்…

மேலும்...

மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வலுவடையும் மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜேஎன்யுவில் ஏபிவிபி அமைப்பினர் கல் வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், பல்கலைக்கழகத்தின் மின்சாரம் மற்றும் இணையதளம் துண்டிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும், மாணவர்கள் பேரணி நடத்தினர். இந்த ஆவணப்படம் டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று மாலை திரையிடப்படுகிறது. நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம்…

மேலும்...