பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி!

புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி அப்போது பேசும்போது, “உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது.. புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த…

மேலும்...

சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு – மோகன் பகவத்துக்கு அச்சம் – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (25 அக் 2020): சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரியும் ஆனால் அதனை வெளியில் சொல்ல பயப்படுகிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோகன் பகவத், விஜய தசமி நிகழ்ச்சியின் தனது உரையில் சீனாவின் பிரச்சினையை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது “சீனா எவ்வாறு இந்திய எல்லையை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது என்பதை உலகம் அறிந்திருக்கிறது. அவர்கள் தைவான், வியட்நாம், மெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் போராடி தோல்வி அடைநனனர்  ஆனால் ….

மேலும்...

நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

ரியாத் (24 அக் 2020): சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் வரும் நவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு விமான சேவையை தொடங்குகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் முதல் விதிக்கப்பட்ட தற்காலிக பயணத் தடையில் இருந்து சில வகை விலக்கு அளிக்கப்பட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் சர்வதேச விமான சேவை தொடங்கியது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது….

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

உச்சம் தொடும் கொரோனா – இந்தியாவிற்கு மேலும் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (18 அக் 2020): இந்தியாவில் வரும் பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு நியமித்த குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசின் தீவிர பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கிளைகள் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. இந்த குழுவானது வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதன்…

மேலும்...

இந்திய சீன எல்லையில் 1 லட்சம் வீரர்கள் குவிப்பு!

புதுடெல்லி (13 அக் 2020): இந்திய சீன எல்லையில் 1 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. பாங்கோங் த்சோ ஏரியின் கரையிலிருந்தும், லடாக்கில் உள்ள பிற மோதல் பகுதிகளில் இருந்தும்  சீன படைகள் திரும்ப பெற வலியுறத்தபட்டது. உயர்மட்ட இந்திய மற்றும் சீன இராணுவ பிரதிநிதிகளின்  இந்த சந்திப்பு 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கிழக்கு லடாக்கில் எல்.ஐ.சியின்…

மேலும்...

இந்தியாவில் டெபிட் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

புதுடெல்லி (01 அக் 2020): இந்தியாவில் டெபிட்-கிரடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகள் தொடர்பாக நடைமுறைக்கு வரும் ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன என்று பார்ப்போம். 1) அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் 2) வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பினால்,…

மேலும்...

எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்!

புதுடெல்லி (21 செப் 2020): வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்த 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதியளிப்பு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மூன்று மசோதாக்களும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. வேளாண் துறை…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (16 செப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி, 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) சோதனையில் முன்னேற்றம்!

புதுடெல்லி (12 செப் 2020): கொரோனாவிற்கான தடுப்பூசியில் இந்தியாவின் கண்டுபிடிப்பான (கோவாக்சின்) சோதனை முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பூசி…

மேலும்...