குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக மாறிய மசூதிகள்!

வதோதரா (21 ஏப் 2021); இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மசூதிகள் மருத்துவமனைகளாக மாறியுள்ளன. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால் குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத் மாநில மசூதிகள் மருத்துவமமனைகளாக செயல்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள மசூதியில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

மேலும்...

திருச்சி மசூதி இடிப்பிற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (13 அக் 2020): திருச்சி திருச்சி திருவானைகோவில் மசூதி இடிக்கப்பட்டதற்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைகோவிலில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்றதடை ஆணைகளைப் பெற்றிருந்த…

மேலும்...

மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக உதவ முன் வந்த மசூதி நிர்வாகம்!

கொல்கத்தா (10 மே 2020): மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மசூதியை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்காக பயன்படுத்திக் கொள்ள மசூதி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மசூதி நிர்வாகம், கொல்கத்தா பெங்காலி பஜார் மசூதியின் மூன்றாவது தளத்தை கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என…

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – சிங்கப்பூரில் அனைத்து மசூதிகளும் தற்காலிக மூடல்!

சிங்கப்பூர் (13 மார்ச் 2020): சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகில் எந்த நாட்டையும் விட்டு வைக்காமல் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை கூட அங்கு நடைபெறவில்லை. இதுகுறித்து மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சிங்கப்பூரா (MUIS) என்ற சிங்கப்பூர்…

மேலும்...

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று…

மேலும்...

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவை (05 மார்ச் 2020): கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இன்று (வியாழன்)காலை கணபதி வேதம்பாள் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து கைது…

மேலும்...

மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல – முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்!

புதுடெல்லி (30 ஜன 2020): மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பெண்கள் மசூதிக்கு செல்வதில் எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெண்களை வழிபாட்டுத் தலங்களில் அனுமதிப்பது தொடர்பான விசாரணையில் இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், “, மசூதிகளில் வழிபாட்டுக்காக…

மேலும்...