சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை!

ரியாத் (13 நவ 2021): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக பெய்து வரும் இந்த மழை சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. ஜித்தாவில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தாயிஃப் நகரில் உள்ள ஹடா கணவாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்கா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது….

மேலும்...

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை!

சென்னை (13 நவ 2021): வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று…

மேலும்...

டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விசிட்!

தஞ்சாவூர் (13 நவ 2021): டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.ஆறாவது நாளான நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார். பின், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். வண்டலுார் தாலுகாவில் வசிக்கும் இருளர், பழங்குடியினர்…

மேலும்...

சிங்கப்பெண்ணே – ஹேட்ஸ் ஆஃப் பெண் போலீஸ் ராஜேஸ்வரி!

சென்னை (11 நவ 2021): உயிருக்குப் போராடியவரை தன் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த பெண் போலீஸ் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பகுதி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த டி.பி. சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவரை, தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து…

மேலும்...

தமிழகத்தில் கனமழைக்கு 14 பேர் பலி!

சென்னை (11 நவ 2021): தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,45,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 187 கால்நடைகள் இறந்துள்ளன. 237 வீடுகள், 1,146 குடிசை வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் நாளை…

மேலும்...

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (09 நவ 2021): கனமழையை அடுத்து கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 கடலோர மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று இரவு சென்னை வருகிறார்கள். சென்னையில் மழை குறைந்தாலும் வெள்ளம் தொடர்கிறது வெள்ள பாதிப்புக்கு தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை…

மேலும்...

கேரளாவில் மீட்புப் பணியில் ராணுவம்!

திருவனந்தபுரம்(17 அக் 2021): கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனழையால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் மீட்புப்பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையால் மாநிலம் முழுவதும், குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக மாநிலத்தின் நெற்கிண்ணமாக அழைக்கப்படும் குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மிதக்கிறது. கொல்லம்,…

மேலும்...

ஜெர்மனி பெல்ஜியம் நாடுகளில் மழை வெள்ளத்தால் 1300 பேர் மாயம்!

ஜெர்மனி (17 ஜூலை 2021): மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1300 பேர் மாயமாகியுள்ளனர். 125 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பாவில் வியாழன் அன்று பெரும் மழை பொழிவு ஏற்பட்டதால், பல நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாய்ந்தது. ரைன், அஹர், மீசே ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு பெரிய அளவில் உருவானதால், ஜெர்மனியின் தென் மேற்கு பகுதிகளில் ஏராளமான வீடுகள்,…

மேலும்...

சவூதி அரேபியாவில் பலத்த மழை!

தபூக் (05 பிப் 2021): சவுதி அரேபியாவின் மேற்கு மாகாணமான சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. மழையைத் தொடர்ந்து, தபூக்கின் பல்வேறு இடங்களில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பலத்த மழை காரணமாக அல் ஆலா-மதீனா சாலை மூடப்பட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை வரை சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை முன்னறிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு மாகாணமான சவுதி அரேபியாவில் தபூக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த…

மேலும்...

புரேவி சூறாவளி – கனமழைக்கு தமிழகத்தில் 11 பேர் பலி!

சென்னை (05 டிச 2020):புரேவி சூறாவளியின் வலிமை குறைந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் 11 பேர் கொல்லப்பட்டனர். கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு தாயும் மகளும் கொல்லப்பட்டனர். கஞ்சிபுரத்தில் மூன்று இளம் பெண்கள் ஆற்றில் விழுந்து இறந்தனர். இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர். சென்னை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் இறந்தார். சென்னையில், லேசான மழை பெய்தது. . தெற்கு மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர்…

மேலும்...