குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐதராபாத் (16 மார்ச் 2020): குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று கூடிய தெலுங்கானா சட்டசபையில் சிஏஏ என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், சட்டசபையில் பேசியபோது, சரியான ஆவணங்கள் இல்லாத மில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர். அதனால் மத்திய அரசு CAA குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்...

தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் கைது!

மன்னார்குடி (14 மார்ச் 2020): தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது கோமாளித்தனமாக பதிவிட்டு பிரபலமானவர் மன்னை சாதிக். இவர் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதனை அடுத்து ரகுராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் மன்னை சாதிக்கை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும்...

துபாயிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே, கேரளாவில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவுக்கு தலா ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக்…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா அரசு தீர்மானம் – முதல்வர் முடிவு!

ஐதராபாத் (17 பிப் 2020): மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. மேலும் பாஜக கூட்டணியில் உள்ள மாநிலங்கள் கூட எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில்…

மேலும்...

சிஏஏவுக்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம்: முதல்வர் தகவல்!

ஐதராபாத் (25 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க…

மேலும்...

அதிர்ச்சி – மூன்று வயது குழந்தைக்கு வாக்காளர் அட்டை!

ஐதராபாத் (08 ஜன 2020): மூன்று வயது குழந்தைக்கு 35 வயது போட்டு வாக்காளர் அட்டை வழங்கி அசிங்கப்பட்டுள்ளனர் அதிகாரிகள். தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் பகுதியில் வசிக்கும் மெதுக்கு ரமேஷ் என்பவர் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டின் முகவரியில் அவரது மூன்று வயது மகள் நந்திதா பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. போதாதற்கு வயது 35 என பதியப்பட்டிருந்தது. இதனை அடுத்து இதுகுறித்து அதிகாரிகளிம் நந்திதாவின் தந்தை பட்டியலிலிருந்து மகளின் பெயரை…

மேலும்...