தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (21 மே 2020): தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் .

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 689 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சியோர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர் ஆகும்.

இதைப் படிச்சீங்களா?:  மத்திய அரசு கொரோனாவை பரப்பவே நினைக்கிறது - பிணராயி விஜயன் குற்றச்சாட்டு!

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது