நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – கணவர் ஹேமந்த் கைது!

943

சென்னை (15 டிச 2020): விஜய் டிவி நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகை சித்ரா கடந்த வாரம் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார் .

சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவர் ஹேமந்தும் உடனிருந்தார். அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சித்தராவின் முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. எனினும் போஸ்ட் மாட்டம் அறிக்கையின்படி போலிசார் தற்கொலை என்பதாகவே தெரிவித்தனர்.

இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் ஹேமந்தை கைது செய்துள்ளனர். இதனால் இவ்வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.