அண்ணாத்த திரைப்படம் எப்படி உள்ளது? பொதுமக்கள் பார்வை!

2465

நடிகர் ரஜினியின் நடிப்பில் படு மாஸாக தீபாவளி (இன்று) வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

முழுக்க முழுக்க குடும்பங்களை டார்கெட் வைத்து இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க, சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் படம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் இந்த திரைப்படம் எதிர் பார்த்தது போல் இல்லை என்கின்றனர். சிலர் படுபோர் என்றும் தொலைக்காட்சி தொடர் போல உள்ளது என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

பலர் சிறுத்தை சிவா ரஜினி காம்போ ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இன்னும் சிலர் படத்தில் புதிதாக எதையும் எதிர்பார்க்காதீர்கள். பல காட்சிகள் சிவாவின் முந்தைய படங்களில் இருந்து எடுக்கப்பட்டது போன்று இருக்கிறது. என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல பலர் ரஜினியும், இடைவேளையும் ஓகே. காமெடி கை கொடுக்கவில்லை. அதிருப்தி அளிக்கிறது. என்று தெரிவித்துள்ளனர்.

பல ரஜினி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.