இணையத்தில் கசிந்தது விஜயின் பீஸ்ட் பட காட்சிகள்!

918

சென்னை (01 மார்ச் 2022): விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் காட்சி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் சிறு காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ‘துப்பாக்கி’ படத்தில் இண்டெர்வெல் கட்சியில் வில்லனுக்கு சவால் விடும் வகையில் போனில் பேசும் விஜய் “ஐயம் வெய்ட்டிங்” என்று கூறுவார்.

இதே போன்ற ஒரு காட்சி தான் தற்போது பீஸ்ட் படத்தில் இருந்து கசிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் காட்சியையோ, புகைப்படத்தையோ யாரும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என விஜய் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.