இந்தியாவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 666 பேர் பலி!

1167

புதுடெல்லி (23 அக் 2021): இந்தியாவில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 9,361 பேர்) மேலும் கேரளாவில் 99 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 27,765 ஆக உயர்ந்ததாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மேலும் 291 இறப்புகள் சேர்க்கப்பட்ட நிலையில், தினசரி கொரோனா இறப்புகளில் (666) இந்தியா இன்று ஒரு பெரிய அதிகரிப்பை பதிவு செய்தது. இதன்மூலம் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,53,708 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் - கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

இந்தியாவில் இதுவரை 1,01,30,28,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,48,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.