கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு – கெஜ்ரிவால் அரசு அனுமதி!

Share this News:

புதுடெல்லி (29 பிப் 2020): ஜேஎன்யூ முன்னாள் மாணவ தலைவர் கண்ணையா குமார் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேஎன்யு., வில் நடந்த போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கன்னையா குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசுக்கு போலீஸ் தரப்பு டெல்லி அரசுக்கு அனுமதி கோரியிருந்தது.

இதனை ஏற்று கொண்ட டில்லி அரசு, கன்னையா குமார் மீது தேசதுரோக வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளது. டில்லி அரசின் அனுமதியை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் பங்கேற்ற உமர்காலித், அனிர்பன்பட்டாச்சார்யா, அகிப் உசேன், உமர் குல் உள்ளிட்டோர் மீது தேசதுரோக வழக்கு தொடரப்படும்.

இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கன்னையா குமார், “என் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய டெல்லி அரசுக்கு நன்றி, டிவி விவாதங்களில் வீணில் பேசிக் கொண்டிருப்பதைவிட நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன். எனவே உடனே இவ்வழக்கை எடுத்து விரைவாக முடிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply