இவங்களுக்கு வேற வேலையே இல்லை – இப்போது ஆப்கானிஸ்தானை கையில் எடுத்துள்ளார்கள்!

பாட்னா(19 ஆக 2021): அரசை விமர்சிப்பர்வர்கள் ஆப்கானிஸ்தான் செல்லாம் என்று பிகார் பாஜக எம்.எல். ஏ ஹரிபூஷன் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளதாக எதிர் காட்சிகள் விமர்சிக்கும் நிலையில் , பீகாரில் பிஸ்ஃபி தொகுதியின் எம் எல் ஏ ஹரிபூஷன் தாக்கூர், அரசை விமர்சிப்பவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம் என்றார்.

மேலும் ,அவர் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மலிவானவை என்றும் , இந்திய அரசை எதிர்ப்பவர்கள் அங்கு செல்லலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் எந்த ஒரு சம்பவமும் இந்தியாவை பாதிக்காது என்று தெரிவித்த அவர், இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு அங்கு எந்த உரிமையும் இல்லை. இந்திய மக்கள் கவனமாக இல்லாவிட்டால், இந்தியாவும் ஆப்கானிஸ்தானாக மாறலாம் என்றார்.

முன்னதாக, மோடி அரசை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தால் இந்தியா முஸ்லீம் நாடாக மாறலாம் என்றும் ஹரிபூஷன் தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்...

கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில்...