பாஜக தலைவர் சுட்டுக்கொலை – டெல்லியில் பரபரப்பு!

493

புதுடெல்லி (21 ஏப் 2022): ஏப்ரல் 20, புதன்கிழமை அன்று டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர் ஜீது சௌத்ரி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 8:15 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்படுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, புதன்கிழமை இரவு 8:15 மணியளவில், ரோந்துப் பணியில் இருந்த அதிகாரிகள், ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டனர். அவர் பாஜக தலைவர் ஜீது சௌத்ரி என அடையாளம் கண்டனர்.

இதைப் படிச்சீங்களா?:  மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கை!

இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சுடப்பட்ட இடத்தில் இருந்து சில வெற்று தோட்டாக்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேரில் கண்ட சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் சிசிடிவி காட்சிகளை மீட்டு வருகின்றனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.