பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

கொல்கத்தா (02 நவ 2021): பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏறப்பட்டுள்ளது

14 மாநிலங்களில் 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகின்றன.

இநிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் இமாச்சல பிரதேசத்தில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் மண்டி மக்களவை தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.

இதேபோன்று பாஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 2 சட்டசபை தொகுதிகளில் ஆதிக்கம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் கட்சி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள முதல்வர் மம்தா, வெறுப்பு அரசியலை நிராகரித்து, வளர்ச்சிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்.

பீகார் மாநிலம் ellenabad தொகுதியில் இந்திய தேசிய லோக் தலைவர் அபே சவுதாலா முன்னிலை வகிக்கிறார்.

இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி சற்று முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்:

அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர்...

அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல்...

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், "நில அதிர்வு எதுவும்...