இந்த ஆண்டு ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பாஜக செய்த செலவு 344 கோடி!

Share this News:

புதுடெல்லி (22 செப் 2022) : இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களுக்கான பிரச்சாரத்திற்காக பாஜக ரூ.344.27 கோடி செலவு செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ரூ.218.26 கோடி செலவிட்டுள்ளது. ஐந்தாண்டுகளில் 58 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தலைவர்களின் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு அதிக பணம் செலவாகியுள்ளது. விர்ச்சுவல் பிரச்சாரத்திற்கு மட்டும் சுமார் 12 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ளன.

உ.பி.யில் அதிக தொகையை பாஜக செலவிட்டுள்ளது. உ.பி.யில் மட்டும் பாஜக 221.32 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் இங்கு குறைந்த பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 2017 உடன் ஒப்பிடும்போது 2022 இல் 26 சதவீதத்திற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பஞ்சாபில் ரூ.36.70 கோடியும், மணிப்பூரில் ரூ.23.52 கோடியும், உத்தரகாண்டில் ரூ.43.67 கோடியும், கோவாவில் ரூ.19.07 கோடியும் அக்கட்சி செலவு செய்துள்ளது. பஞ்சாப் மற்றும் கோவாவில் கடந்த தேர்தலை விட ஐந்து மடங்கு அதிக பணம் செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் செலவழித்தாலும், பஞ்சாபில் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடிந்தது. 2017ல் ஒரு இடத்தையும் வென்றது. கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு தேர்தல் செலவு பெருமளவு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 2022ல் 194.80 கோடி செலவிட்டது. 2017ல் இது ரூ.108.14 கோடியாக இருந்தது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் 80 சதவீதம் செலவு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் எவ்வளவு செலவழித்துள்ளது என்ற புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை,


Share this News:

Leave a Reply