பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்?

706

புதுடில்லி (29 செப் 2021): பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக ,முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமரீந்தர் சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து செப்.18-ல் அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார்.

புதிய அமைச்சரவையில் 18 பேர் அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில் திடீர் திருப்பமாக, மாநில காங்., தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து நேற்று ராஜினாமா செய்தார். இருப்பினும் சித்து ராஜினாமாவை மேலிடம் ஏற்கவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்றுடெல்லி சென்றுள்ள அமரீந்தர்சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லம் சென்று சந்தித்து பேசினார். இதன் மூலம் அவர் பா.ஜ.,கவில் இணையலாம் என கூறப்படுகிறதுதயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.