ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்கள் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்!

Share this News:

வாரணாசி (06 செப் 2022): ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிலையை இந்துக்கள் தரிசனம் செய்ய அனுமதி கோரிய வழக்கில் இவ்விவகாரத்தில் முஸ்லீம் தரப்பினர் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

உத்திர பிரதேசம் வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள “ஆதிவிஷேஷ்வரை” ‘தரிசனம்’ செய்யக் கோரி விஸ்வ வைதிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிரண் சிங் பிசென், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த வளாகத்திற்குள் முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்யவும் , அதை இந்துக்களிடம் ஒப்படைக்கவும் மனுவில் கோரியிருந்தார்.

இதுகுறித்த விசாரணையில் முஸ்லீம் தரப்பு இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரியது. அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Share this News:

Leave a Reply